"குட் மார்னிங்" என்கிற குறுஞ்செய்தியால் 50 லட்சத்தை இழந்த முதியவர்
வாட்ஸ்அப்பில் 'குட் மார்னிங்' என்னும் மெசேஜ் மூலம் அறிமுகம் இல்லாத நபரைச் சந்திக்கச் சென்ற 50 வயது முதியவரிடம் பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து 5 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை 3 மர்ம நபர்கள் கையாடல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோவிந்தபுரா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின்படி, 50 வயதுடைய நபர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடையாளம் தெரியாத நபரிடம் பேசி பழகி வந்துள்ளனர். கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, அந்த நபர் வாட்ஸ்அப் பயனரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் தனது இருப்பிடத்தையும் அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். 50 வயதான அந்த நபர் இரவு வீரணபாளையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் பார்க்கச் சென்றபோது, அறைக்குள் மொத்தம் 3 பேர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது அந்த மூவரும் தங்களை போலீஸ்காரர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், குற்றம் சாட்டினார். அவர்கள் அவரது கிரெடிட் கார்டு மற்றும் கையில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து, குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை அறைக்குள் பூட்டிவிட்டு ஹோட்டலை விட்டு வெளியேறியதாக அவர் குற்றம் சாட்டினார். பின்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறி, வீட்டிற்கு வந்தபோது, ஐந்து பரிவர்த்தனைகளில் ரூ.3,91,812 அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றப்பட்டதை பார்த்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, மேலும் ரூ.2 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அவருக்கு செய்தி வந்துள்ளது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து ஒரு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய 2 நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.